சென்னையில் ரூ. 5.07 கோடி மதிப்பிலான நகைகள், பணம் பறிமுதல்.

சென்னையில் இதுவரை ரூ.5.07 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2024-03-25 01:23 GMT

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

அனைத்து வாக்காளர்களையும் உள்ளடக்கிய தேர்தல் 2024 என்ற வகையில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற பேரணியை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான இராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பது தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பேரணி நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் ஏதுவாக வாக்களிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு தகுந்த மாறி ஒவ்வொரு ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என தெரிவித்தார். 3719 வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக பாதை இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது.

வாக்கு சாவடிக்கு வர இயலாத மாற்று திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதுக்கு மேல் இருக்கும் முதியவர்களுக்கு அவர்களுக்கு வீடுகளுக்கு சென்று வாக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 63,751 முதியர்கள் உள்ளனர். 10370 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இல்லத்திலே வாக்களிக்கும் முறை கொண்டு வரப்படும் என கூறினார். மேலும் வாக்கு சாவடிகளுக்கு வந்து வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அத்தனை அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும் எனக் கூறினர். சென்னை பொறுத்தவரை ஓட்டு சதவீதம் 60 விழுக்காடாக ஆக தான் எப்போதும் இருக்கும் சராசரியாக மாநிலத்தில் 72 விழுக்காடு இருக்கும், மாற்றுத்திறனாளிகள் நமக்கு எடுத்து எடுத்துக்காட்டாக உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அனைத்து பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூடம் நடைபெற்றது. அதில் கூட மாற்றுத்திறனாளிகளை சமமாக நடத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம் என கூறினார்.

சென்னையை பொறுத்தவரை இதுவரை 5.07 கோடி அளவிலான பணம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கையில் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துப் போகலாம் அதற்கு மேல் எடுத்துப் போகும் போது ஆவணத்தோடு எடுத்துச் செல்ல வேண்டும் அதேபோல நகை உற்பத்தி செய்யும் நகைகடை உரிமையாளர்களும் உரிய ஆவணத்தோடு நகைகளை எடுத்துச் செல்ல வேண்டும் இல்லை என்றால் இதனை தற்பொழுது தவிர்க்க வேண்டும் என அவர் பொது மக்களுக்கும், நகைக்கடை உரிமையாளர்கள், வியாபாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். முறையான ஆவணம் இன்றி கொண்டு வரப்படும் நகைகளை பறிமுதல் செய்யப்படும்போது அவர்கள் எங்களின் மீதே குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். தேர்தல் ஆணையம் விதித்துள்ளப்படி தான் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.

Tags:    

Similar News