மிக்ஜாம் புயலுக்கு ரூ.1487 கோடி நிவாரணத் தொகை - தமிழக அரசு தகவல்
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 25 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1487 கோடி நிவாரண தொகை வழங்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு அறிவிக்கபட்ட நிவாரண தொகையை உயர்த்தி, வங்கி கணக்கில் வரவு வைக்க கோரி வழக்குகள் தொடுக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 24 லட்சத்து 25 ஆயிரத்து 336 குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரத்து 455 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கபட்டது. விடுவிக்கப்பட்ட நிவாரண தொகை கோரி விண்ணப்பித்த 53 ஆயிரம் குடும்பங்களுக்கு 31 கோடியே 73 மேலும் வழங்கபட்டுள்ளது என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பாக முழுமையான விபர அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி சத்யநாரயண பிரசாத் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான விசாரணை வரும் 17ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.