இரு முறை வெளியேற்றப்பட்டால் சட்டப்பேரவையில் பங்கேற்க கூடாது என்பது விதி - முன்னாள் சபாநாயகர் தனபால்.

நாளேடுகளில் வந்த கருத்துகளை சட்டமன்றத்தின் சபாநாயகர் பேரவையில் பேச கூடாது. இது சட்டபேரவை விதிகளிலேயே உள்ளது என முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

Update: 2024-06-27 07:23 GMT

முன்னாள் சபாநாயகர் தனபால்

நேற்று சட்டபேரவை கூடியவுடன் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில் அவர்களை சபாநாயகர் வெளியேற்ற உத்தரவிட்டார் சபா நாயகர். அதனை தொடர்ந்து பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஏற்கனவே இரண்டு முறை அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்,அவர்களை இனி இந்த மானிய கோரிக்கை கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க அனுமதிக்க கூடாது என அமைச்சர் கே என் நேரு நேற்று தீர்மானம் கொண்டு வந்தார். அதனை தொடர்ந்து பேசிய முதலமைச்சர் இன்றைய கூட்டத்தில் அதிமுக பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நேற்று கூறினார்.

 ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த முக்கிய தீர்மானம் வரும் நிலையில் அந்த எண்ணத்தில் அதிமுகவை பேரவைக்குள் அனுமதிக்க முதல்வர் கோரியிருப்பார் என்றும் நானாக செய்தித்தாள்களில் வந்ததை வைத்து இதை கூறுகிறேன் என்றும் சபாநாயகர் பேசியிருந்தார். இது குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் சபாநாயகர் தனபால், ஒரு சட்டபேரவை தலைவர் நாளேடுகளில் வந்த கருத்துகளை பேரவையில் பேச கூடாது. இது பேரவை விதிகளிலேயே உள்ளது என தெரிவித்தார். மேலும் பேசியவர், இரண்டு முறை வெளியேற்றப்பட்டால் சட்டபேரவையில் பங்கேற்க முடியாது என்பது பேரவை விதிகளில் இருப்பது உண்மை தான். சபாநாயகர் உத்திரவிட்டுள்ளதால் அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரில் இனி வரும் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முடியாது என கூறினார்.

Tags:    

Similar News