கிராமப்புற தபால் துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
Update: 2023-12-13 02:01 GMT
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தபால் துறையில் சேலம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் 400-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகிறார்கள். கிராமப்புறங்களில் வீடு வீடாக தபால் வழங்கும் பணி மற்றும் அலுவலக பணிகளில் 400 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 8 மணிநேர வேலை என பணியை வரன் முறைப்படுத்த வேண்டும். மருத்துவபடி வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றததால் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதனால் கிராமப்புறங்களில் தபால் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு அவர்களை அழைத்து பேசி விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென தபால் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.