வெளிச்சந்தையில் கொப்பரை தேங்காய் விற்பனை - விவசாயிகள் எதிர்ப்பு

Update: 2023-12-11 00:37 GMT
கொப்பரை தேங்காய்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மத்திய அரசு நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரை தேங்காய்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதற்கு தென்னை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில்  நாஃபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்துள்ள ஒரு லட்சம் மெட்ரிக். டன் கொப்பரை தேங்காய்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஏற்கெனவே  தேங்காய் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மாற்றாக கொப்பரை தேங்காய்களை எண்ணெய்யாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்யலாம் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து தென்னை  விவசாயிகள் கூறுகையில், மத்திய அரசு கொள்முதல் செய்து வைத்துள்ள கொப்பரை தேங்காய்களையும், இனி கொள்முதல் செய்ய உள்ள கொப்பரை தேங்காய்களையும் எண்ணெய்யாக மாற்றி அங்காடிகள் மூலமாகவோ அல்லது மானிய விலையிலோ விற்பனை செய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்காத நிலை ஏற்படும்" என்றார்.

Tags:    

Similar News