சேலம் : 15 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 99 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தமிழகம் முழுவதும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 15 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-02-02 02:13 GMT
பைல் படம் 

சேலம் மாநகர டவுன் உதவி கமிஷனர் வெங்கடேசன், நெல்லை ஜங்ஷன் உதவி கமிஷனராகவும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், திருப்பூர் மாநகர் கே.வி.ஆர். உட்கோட்ட உதவி கமிஷனராகவும், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜமுரளி, விருதுநகர் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதேபோல், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன், கரூர் மாவட்ட குற்ற ஆவணக்காப்பகத்திற்கும், சென்னை தலைமையிடத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவராமன், தர்மபுரி போலீஸ் துணை சூப்பிரண்டாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முனியசாமி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜன், தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு இளமுருகன், கோவை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு மற்றும் மாவட்ட குற்றப்பிரிவுக்கும், திருச்சி ஜீயர்புரம் துணை சூப்பிரண்டு பாரதிதாசன், சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திற்கும், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை துணை சூப்பிரண்டு பிருத்விராஜ் சவுகான், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூருக்கும், வாழப்பாடி போலீஸ் துணை சூப்பிரண்டு ஹரிசங்கரி, சேலம் டவுன் உதவி கமிஷனராகவும், நெல்லை மேலப்பாளையம் துணை சூப்பிரண்டு சதீஷ்குமார், சேலம் மாவட்டம் ஆத்தூருக்கும், ஓமலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கீதா, பரமத்திவேலூருக்கும், பர்கூர் துணை சூப்பிரண்டு மனோகரன், நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சேலம் சரகத்தில் 15 பேர் உள்பட தமிழகம் முழுவதும் 99 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி.சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

Tags:    

Similar News