கட்சி வாட்ஸ் ஆப் குழுவில் அவதூறால் பாஜக பெண் நிர்வாகி மாயம்

கட்சி வாட்ஸ் அப் குழுவினர் அவதூறு பரப்பியதால் தற்கொலை செய்யப்போவதாக கூறிவிட்டு பா.ஜனதா பெண் நிர்வாகி மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-05-09 07:11 GMT

பைல் படம் 

 ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் விநாயகபுரம் செந்தில்நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் மனைவி விஜயலட்சுமி (வயது 40). இவர், பா. ஜனதா கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட கலாசார பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இவர் திடீரென மாயமாகி விட்டார். இதுதொடர்பாக அவரது கணவர் சுரேஷ் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக என்னுடைய மனைவிக்கும், பா.ஜனதா நிர்வாகி ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. நடவடிக்கை அந்த நபர், என்னுடைய மனைவி பற்றி கட்சியின் வாட்ஸ்அப் குழுவில் அவதூறு பரப்பி உள்ளார். இதனால் மனம் உடைந்த என்னுடைய மனைவி, தற்கொலை செய்ய போவதாக எனது வாட்ஸ்அப் குழுவில் பதிவிட்டு விட்டு மாயமாகி விட்டார்.

அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. எனவே என்னுடைய மனைவியை கண்டுபிடித்து தருவதுடன், அவரை பற்றி அவதூறு பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனு மீது ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பா.ஜனதா கட்சியின் வாட்ஸ் அப் குழுவில் வந்த பதிவை தொடர்ந்து பெண் நிர்வாகி மாயமான விவகாரம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News