சேலம் மத்திய சிறையில் கைதிகள் மோதல் உறவினர்களை சந்திக்க 2 மாதம் தடை

சிறைக்குள் கைதிகள் மோதல் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Update: 2023-12-14 02:48 GMT

சேலம் மத்திய சிறையில் கைதிகள் மோதல் உறவினர்களை சந்திக்க 2 மாதம் தடை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் தீனா என்ற கைதி பக்கெட் ஒன்றில் தண்ணீர் பிடித்து வைத்துள்ளார். அப்போது அங்கு வந்த நித்தியானந்தம் என்ற கைதி அந்த தண்ணீரில் கை, கால்களை கழுவினார். இதனால் ஆத்திரமடைந்த தீனா அவரிடம், ஏன் நான் பிடித்து வைத்திருக்கும் தண்ணீரை பயன்படுத்தினாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தீனா தனது கூட்டாளிகள் பிரதீப், பிரகாஷ், ராஜேஷ் ஆகியோருடன் சென்று நித்தியானந்தத்தை தாக்கினார். தொடர்ந்து அவர்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதை பார்த்த சிறை வார்டர்கள் இந்த மோதலை தடுத்து நிறுத்தினர். இந்த மோதல் குறித்து சிறை கண்காணிப்பாளர் வினோத் விசாரணை நடத்தினார். பின்னர் மோதலில் ஈடுபட்ட கைதிகளை வேறு ஒரு பிளாக்கிற்கு மாற்ற உத்தரவிட்டார். மேலும் அவர்கள் உறவினர்களை சந்திக்க 2 மாதம் தடை விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனிடையே தீனாவிற்கு ஆதரவாக செயல்பட்ட மேலும் 3 கைதிகளும் கண்காணிப்பு பிளாக்கிற்கு மாற்றப்பட்டனர். சிறைக்குள் கைதிகளிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News