சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-12-21 10:47 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்

இந்திய ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் ஆகியோரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து சேலம் மேற்கு , சேலம் மாநகர் , சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பாக ஆர்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சேலம் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் கிழக்கு மாவட்ட தலைவர் சண்முகநாதன், மேற்கு மாவட்ட தலைவர் சுதிர் முருகன், பாரளுமன்ற பொறுப்பாளர் அண்ணாதுரை, பார்வையாளர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News