சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான இலவச எழுத்து தேர்வு

சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான இலவச எழுத்து தேர்வு நடைபெற்றது.;

Update: 2023-12-02 05:42 GMT

காவலர் தேர்வு எழுதியவர்கள்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2,599 இரண்டாம் நிலை காவலர், 86 இரண்டாம் நிலை சிறைக்காவலர், 674 தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு, வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கான மாதிரி எழுத்துத்தேர்வு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1மணி வரை நடைபெற உள்ளது. இதில் விருப்பமுள்ள தேர்வர்கள் தங்களின் கைப்பேசி எண் மற்றும் தேர்வுக்கான பதிவு எண் ஆகிய விவரங்களை 94990-55941 என்ற தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement

8மேலும், தேர்வு நடைபெறும் நாளன்று, வளாகத்தில் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேர்வு நுழைவுச்சீட்டு நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். காலை 10 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இரண்டாம் நிலைக்காவலர் பணிக்கு தயாராகும் தேர்வர்கள், இந்த மாதிரி தேர்வில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட வேலைவாய்ப்பு துணை இயக்குனர் மணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News