மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்கு சேலம் தீயணைப்பு வீரர்கள் பயணம்

மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்கு சேலம் தீயணைப்பு வீரர்கள் சென்றனர்.

Update: 2023-12-07 13:29 GMT

மீட்பு பணிக்கு தயாரான தீயணைப்பு வீரர்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்க சேலத்தில் இருந்து 17 தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 4ந்தேதி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை மிக்ஜாம் புயல் தாக்கியது.

புயலால் 4 மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்களை மீட்க தமிழகம் முழுவதிலிருந்தும் தீயணைப்பு வீரர்கள், ஊர்காவல் படையினர், போலீசார் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த 3ம் தேதி இரவு சேலத்திலிருந்து ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் 17 தீயணைப்பு வீரர்கள், ஒரு தீயணைப்பு வாகனம், பணியாளர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் சென்னைக்கு சென்றது. இதில் முதல்கட்டமாக தீயணைப்பு வீரர்கள் திருவள்ளூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.

தற்போது 17 பேரும் சென்னையில் பல்வேறு இடங்களில் மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மறு உத்தரவு வரும்வரை சென்னைக்கு சென்றவர்கள் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று சேலம் தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News