சேலம் : ஊருக்குள் வந்த காட்டு யானைகள் வனப்பகுதிக்கு விரட்டியடிப்பு

Update: 2023-12-04 01:57 GMT

காட்டு யானைகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியேறிய ஒரு ஆண் மற்றும் பெண் யானை பழையூர், தொப்பையாறு, காவிரி நீர்த்தேக்க பகுதியை கடந்து சேலம் மாவட்டத்துக்கு வந்தன. அவை மேச்சேரி அருகே சித்திக்குள்ளனூர் கிராமத்துக்கு வந்து அங்குள்ள கரட்டு பகுதியில் முகாமிட்டிருந்தன. இதையடுத்து ௨ யானைகளும் நேற்று முன்தினம் எம்.காளிப்பட்டி ஊராட்சி கோட்டியான் தெரு பகுதியில் விவசாய நிலத்தையொட்டி உள்ள சிறிய கரட்டு பகுதியில் நின்றன. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சேலம் மாவட்ட வன அலுவலர் காஷியப்சசாங் ரவி, மேட்டூர் உதவி வனப்பாதுகாவலர் மாதவியாதவ், வனச்சரகர் சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் சேலம் மற்றும் தர்மபுரி வனத்துறையினர், போலீசார், வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் எம்.காளிப்பட்டி ஊராட்சி பகுதிக்கு வந்தனர். பின்னர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்து யானைகளை விரட்ட தொடங்கினர். அந்த யானைகளை மேட்டூர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியை கடந்து தர்மபுரி மாவட்ட வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டினர். எம்.காளிப்பட்டி கிராம பகுதியில் முகாமிட்டிருந்த 2 யானைகள் வனப்பகுதிக்கு விரட்டப்பட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Tags:    

Similar News