கருமான் பிள்ளையார் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ராணிப்பேட்டை மாவட்டம், சோமசவுந்தர் கிராமத்தில் ஸ்ரீ கருமான் பிள்ளையார் திருக்கோவிலில் நடைபெற்ற சங்கடஹரா சதுர்த்தி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-03-30 07:59 GMT
சிறப்பு பூஜை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த சோமசவுந்தர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருமான் பிள்ளையார் திருக்கோவில் சங்கடஹரா சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அப்போது, சாமிக்கு பால், தேன், சந்தனம், பன்னீர், இளநீர், திருநீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களைக் கொண்டு சிறப்பு பூஜை செய்து அருகம்புல் மாலை, வெட்டிவேர் மாலை, மலர்மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் அன்னதானம் வழங்கினார்கள்.