வைகோ பூரண குணமடைந்து சசிகலா வேண்டுதல்

திராவிட சித்தாந்தங்களை சிறிதளவும் விட்டு விலகாமல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டவர், அன்பு சகோதரர் வைகோ பூரண குணமடைந்து வீடு திரும்ப ஆண்டவனை வேண்டுகிறேன் என வி கே சசிகலா பதிவிட்டுள்ளார்.

Update: 2024-05-30 12:56 GMT

சசிகலா

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் தோழி வி கே சசிகலா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

தற்போது வைகோவுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மண்ணின் திராவிட இயக்க தலைவர்களில் ஒருவராக விளங்கும் வைகோ தமிழகத்தின் உரிமைகளுக்காகவும், தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து போராடி வருபவர். திராவிட சித்தாந்தங்களை இம்மியளவும் விட்டு விலகிடாமல் வாழ்ந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். எங்களுடன் வைகோ மேற்கொண்ட அரசியல் பயணம் மிகவும் புனிதமானது. அதனை இந்நேரத்தில் எண்ணி மிகவும் பெருமிதம் அடைகிறேன். அன்புச்சகோதரர் வைகோ விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் எனவும், அதே உத்வேகத்துடன் மீண்டும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News