மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள் - விண்ணில் பாய்ந்தது

இந்தியாவில் முதல் முறையாக சீர்காழி தனியார் பள்ளி மாணவர் தயாரித்த செயற்கை கோள் ஹீலியம் பலூன் உதவியுடன் விண்ணில் செலுத்தபட்டது. இந்த செயற்கை கோள் ஒரு லட்சம் அடி உயரம் சென்று விண்ணில் ஆய்வு செய்ய உள்ளது.

Update: 2024-02-05 06:03 GMT

செயற்கைகோள் அனுப்பப்பட்டது 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வருகிறது சுபம் வித்யா மந்திர் தனியார் பள்ளி. இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் விண்வெளி சார்ந்த ஏதேனும் ஒரு நிகழ்வுகளை அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தி சாதனை படைத்து வருகின்றனர். முன்னதாக ராக்கெட் லாஞ்சிங், பல லட்ச கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கோள்களை காணும் வகையில் தொலைநோக்கி உருவாக்கும், சேட்டிலைட் சிக்னலை பள்ளியில் இருந்து ட்ராக்கிங் செய்தனர்.

தற்போது அதனைத் தொடர்ந்து இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களே உருவாக்கிய சிறியதாக சேட்டிலைட்டை பள்ளியிலிருந்து விண்ணுக்கு செலுத்தி சாதனை படைத்துள்ளனர்.சுமார் 1.63 கிலோ கிராம் எடை கொண்ட இந்த சிறிய ரக சேட்டிலைட்டினை பூமியில் இருந்து சுமார் ஒரு லட்சம் அடி உயரத்திற்கு ஹீலீயம் பலூன் உதவியுடன் அனுப்பி அங்குள்ள தட்பவெப்ப நிலையை ஆராய்ந்து தகவலை அனுப்பும் வகையில் இதனை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் பள்ளியும், சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளி மாணவ மாணவிகளும் ஓப்பன் ஸ்பேஸ் பவுண்டேசனுடன் இணைந்து உருவாக்கி அனுப்பியுள்ளனர்.

இந்த செயற்கைக்கோளானது தொடர்ந்து 3 முதல் 8 மணி நேரம் தனது பயணத்தை விண்ணில் செய்து தகவல்களை திரட்டும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டு பள்ளியில் இருந்து செலுத்தப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சீர்காழி காவல் ஆய்வாளர் சிவகுமார், பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த நிகழ்வை கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News