தேசிய அளவிலான பில்லியனர் விருது பெற்ற சாத்துார் விவசாயி

Update: 2023-12-13 08:08 GMT
விவசாயி விக்னேஸ்வரன்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு விக்னேஷ்வரன் (39) என்ற மகன் உள்ளார். விக்னேஷ்வரனுக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர் விக்னேஷ்வரன் 12ம் வகுப்பு வரை படித்து உள்ளார். இவர்களது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தந்தைக்கு பின்னர் விக்னேஷ்வரன் கடந்த 20 ஆண்டுகளாக தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். அதனுடன் சேர்ந்து ஆடு மற்றும் மாட்டு பண்னையும் வைத்து உள்ளார். மேலும் சிறு தானிய பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய நிலத்தில் குதிரை வாளி மற்றும் ராகி மற்றும் தினை மற்றும் உளுந்து பாசி பயிர் துவரை உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை அதிக அளவில் சாகுபடி செய்து அருப்புக்கோட்டையில் உள்ள தமிழக அரசின் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் விதைகளாக வழங்கி வருகிறார். மேலும் கரிசல் மண்ணில் உற்பத்தியாகும் விதைகளுக்கு 98 சதவீதம் முளைப்புத் திறன் உள்ளது என்பதால் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் வழங்கி வருகிறார் விக்னேஷ்வரன்.

மேலும் அதே சமயம் தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் சிறு தானியத்தின் புதிய ரக பயிர்களின் விதைகளை உற்பத்தி செய்தும் வழங்கி வருகிறார். இதுவரை சுமார் 100 க்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு சிறு தானிய விதைகளை உற்பத்தி செய்து கொடுத்து உள்ளார். இந்த நிலையில் அருப்புக்கோட்டை யில் உள்ள தமிழக அரசின் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி நிலையம் முன்னெடுப்பின் காரணமாக விக்னேஷ்வரனுக்கு சிறு தானிய உற்பத்தியில் சிறந்து விளங்கியதற்காக Millianaire Farmer of India என்ற அமைப்பு கடந்த 6ம் தேதி புதுடில்லியில் நடந்த இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவன மேளாவில் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.

மேலும் தமிழ்நாட்டிலேயே சிறுதானிய உற்பத்தி மற்றும் பல புதிய அணுகுமுறைகளை பின்பற்றியமைக்காக சிறந்த விவசாயி என்று விருதுநகர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் விக்னேஷ்வரன் என்பவரை சிறந்த விவசாயி என்று விருது கொடுத்து கவுரப்படுத்தி இருக்கிறது. மேலும் விதை உற்பத்தியில் பல புதிய ரகங்களை பயன்படுத்தியது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை யில் புது முயற்சி, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி உற்பத்தியை பெருக்குவது என்று பல முயற்சிகள் மூலமாக விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பெரும் முயற்சியை பாராட்டி விருது கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த விருது பெற்றதன் மூலம் என்னை பார்த்து இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்றார்.

Tags:    

Similar News