சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ. 12.14 கோடி செலவில் வளர்ச்சித்திட்ட பணிகள்

சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.7.19 கோடி திட்ட பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 12.14 கோடி செலவில் வளர்ச்சித் திட்ட பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா புதன்கிழமை தொடங்கி வைத்தார்;

Update: 2024-02-29 17:20 GMT

பணிகளை தொடக்கி வைத்த எம்பி

சத்தியமங்கலம் நகராட்சியில் ரூ.7.19 கோடி திட்ட பணிகள் உள்ளிட்ட மொத்தம் ரூ. 12.14 கோடி செலவில் வளர்ச்சித் திட்ட பணிகளை நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

சத்தியமங்கலம் நகராட்சியில் பகுதியில் ரூ.7.19 கோடி செலவில் நிறைவேற்றப்படும் வளர்ச்சித்திட்ட பணிகள் தொடங்க விழா நகராட்சி தலைவர் ஆர்.ஜானகி ராமசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்.

Advertisement

கலைஞர்நகர்ப்புற மேம்பாட்டு நிதியில் இருந்து பிரிட்டோ காலனியில் ரூ.39 லட்சம் செல்வில் பூங்கா, நகராட்சி பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் ரூ.180 லட்சம், குடியிருப்புகளுக்கு பாதாளச்சாக்கடை இணைப்பு வழங்குதல் 257.91 லட்சம், புளியம்கோம்பையில் புதிய அங்கனவாடி மையம், அமரூத் திட்டத்தில் பாசக்குட்டையில் தூர்வாரதுதல் 11 லட்சம், நமக்குநாமே திட்டத்தில் மழைநீர் வடிகால் அமைத்தல் பணிகளுக்கு ரூ42.70 லட்சம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகள் என மொத்தம் ரூ. 7.19 கோடி செலவில் நடைபெறுகிறது.

அதே போல, கே.என்.பாளையம் பேரூராட்சியில் 2.68 கோடி செலவிலும் சிவியார்பாளையத்தில் 10 லட்சமும் கொமராபாளையத்தில் ரூ.10 லட்சமும் அரியப்பம்பாளையத்தில் ரூ.2.70 கோடி செலவிலும் வளர்ச்சித் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.

Tags:    

Similar News