சவுக்கு சங்கர் வீட்டிற்கு சீல் ! பேட்டி எடுத்த பெலிக்ஸ் ஜெரால்டு கைது..!

Update: 2024-05-11 04:15 GMT

 சவுக்கு சங்கர் - பெலிக்ஸ் ஜெரால்டு

பெண்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அடுத்தடுத்து கஞ்சா,        மோசடி உள்ளிட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவரது வீட்டிலும், அலுவலகத்திலும் நேற்று பத்து மணி நேரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மதுரவாயலில் உள்ள அவரது வீட்டிலும், தியாகராய நகரில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்ட பின் குடும்ப அடையாள மொபைல் போன், அட்டை, டேப்,கம்ப்யூட்டர் , நான்கு கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, கார், ரூ.2 லட்சம், பேங்க் பாஸ்புக் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement

இதனை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மதுரவாயல் தாசில்தார் முன்னிலையில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது.

மேலும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூட்யூப் சேனலின் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டை டெல்லியில் வைத்து கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்ததுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News