சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது உண்மையா? மருத்துவமனையில் அனுமதி !

Update: 2024-05-09 06:58 GMT

சவுக்கு சங்கர்

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைதான பிரபல யூட்யூபரகர் சவுக்கு சங்கர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த நான்காம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை அடுத்து நேற்று மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோட்டில் சவுக்கு சங்கரை போலீசார் ஆஜர் படுத்தினார்.

நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர், "இது பொய்யான வழக்கு கோவை சிறையில் போலீசார் என்னை கடுமையாக தாக்கினர் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் கோவை சிறையில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் மதுரை சிரிக்க மாற்ற வேண்டும்." என்று கோரிக்கை விடுத்தார்.

Advertisement

இதனை அடுத்து சவுக்கு சங்க மீண்டும் கோவை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சவுக்கு சங்கத் தாக்கப்பட்டதாகவும்,கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். புகாரி அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின் பெயரில் சட்டப்பணிகள் ஆணைக்குழு விசாரித்த பின்னர் அந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கை அடிப்படையில் சவுக்கு சங்கருக்கு சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News