சவுக்கு சங்கர் உடல்நிலை - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரின் உடல் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய பதிவுத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-05-09 02:04 GMT

சவுக்கு சங்கர்

சிறையில் சங்கர் சித்ரவதை செய்யப்பட்டது குறித்து நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சவுக்கு சங்கர் தாய் கமலா தாக்கல் செய்த வழக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிறைக்கு கொண்டு செல்லும் முன் சவுக்கு சங்கருக்கு எந்த காயமும் இல்லை என்று சவுக்கு சங்கர் தாய் தெரிவித்துள்ளார். தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை கொண்டு சென்ற போது விபத்து ஏற்பட்டது,விபத்தில் சங்கரின் இடது கை, வலது கால், உதட்டில் காயம் ஏற்பட்டது சிறையில் தாக்கப்பட்டதாக கோவை நீதிமன்றத்தில் சங்கர் அளித்த புகார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது 3 வழக்கறிஞர்கள், எலும்பு சிகிச்சை நிபுணருடன் சென்று ஒரு மணி நேரம் சங்கரை விசாரித்தனர் என்று அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள யூ டியூபர் சவுக்கு சங்கரின் உடல் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவிடம் அறிக்கையை பெற்று தாக்கல் செய்ய பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News