பள்ளி ஆண்டு விழா

குண்டுக்கல்லூர், நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில் 14வது பள்ளி ஆண்டு விழா நடந்தது.

Update: 2023-12-09 10:56 GMT

குண்டுக்கல்லூர், நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில் 14வது பள்ளி ஆண்டு விழா நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் குண்டுக்கல்லூர் நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் பள்ளியில் 14- வது பள்ளி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சேலம் ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு அமலா அட்வின் கலந்து கொண்டு சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சிலுவை சகோதரர்கள் சபையின் இந்திய தலைவர் அருட்சகோதரர் சந்தோஷ், சின்னத்திரை நடிகை மைனா நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். அதனைத் தொடர்ந்து மாணவ -மாணவிகளின் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் நடனம் , நாடகம் , பாடல் பாடுதல் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் நடைபெற்றது. இவ்விழாவில் அருட்தந்தையர்கள் , அருட்சகோதரர்கள் , அருட்கன்னியர்கள், பெற்றோர்கள், முன்னாள் மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் அருட்சகோதரர் மரிய சுரேஷ் , துணை முதல்வர் ஸ்டீபன் ஆனந்தராஜ் , நிர்வாகி அருட்சகோதரர் நெல்சன் டிசோசா, ஆலோசகர் அருட்சகோதரர் கில்பர்ட் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News