பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு

சின்னசேலத்தில் தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர்களிடம், விபத்தின்றி வாகனம் ஓட்டும் முறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-12-12 10:27 GMT

சின்னசேலத்தில் தனியார் பள்ளி பஸ் ஓட்டுநர்களிடம், விபத்தின்றி வாகனம் ஓட்டும் முறைகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சின்னசேலத்தில் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர்.

சின்னசேலத்தில் கடந்த வாரம் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பேருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு சமத்துவபுரம் அருகே சென்ற போது பேருந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 15க்கும் மேற்கொண்ட குழந்தைகள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது சம்பந்தமாக பேருந்தின் ஓட்டுனர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து பவர் ஆபீஸ் அருகே உள்ள பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பேருந்து நேற்று காலை விஜயபுரம், திருவிக நகர், உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி பேருந்தில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் போது பேருந்தில் இருந்த ஆசிட் பாட்டில் எதிர்பாராத விதமாக விழுந்து உடைந்தது இதில் மாணவர்களுக்கு மூச்சி தினறல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்ப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்ட 23 மாணவர்களை சின்னசேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் அனைவரும் வீடு திரும்பினார்கள்.

இது சம்மந்தமாக பேருந்தின் கிளினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் சின்னசேலம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுனர்களிடம் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் பேருந்தில் தீப்பட்ற கூடிய பொருட்கள், அபாயமான பொருட்கள், விஷநெடி உள்ள பொருட்கள் எதுவும் பேருந்தில் ஏற்றக்கூடாது என்றும், மது போதை மற்றும் செல்போன் பேசிக்கொண்டு பேருந்து ஓட்டக்கூடாது என்றும் அறிவுரை வழங்கினார்.மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

Similar News