வாழப்பாடி அருகே பள்ளி மாணவர் தற்கொலை

வாழப்பாடி அருகே பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-12-17 13:27 GMT

தற்கொலை செய்து கொண்ட மாணவன்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் கிழக்குக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி பாஸ்கரன். இவரது மகன் அருட்செல்வன் (வயது 16). 11-ம் வகுப்பு மாணவர் சிங்கிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த இம்மாணவன் பள்ளிக்கல்வி பாடத்தில் மட்டுமின்றி கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் முதல் மாணவராக திகழ்ந்து பன்முக திறனாளராக விளங்கி வந்தார்.

இதனால் இந்த மாணவர் மீது சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடமும் மதிப்பும் மரியாதையும் மிகுந்து இருந்தது. செல்போன் பயன்படுத்தி அடிக்கடி விளையாடி வந்த இந்த மாணவனை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த மாணவன் அருட்செல்வன் கடந்த 13-ந்தேதி விவசாய தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த பூச்சிக்கொல்லி விஷத்தை குடித்தார். வீட்டிற்கு அருகில் மயங்கி கிடந்த அருட்செல்வனை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

Iதொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை பெற்ற மாணவன் அருட்செல்வன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பன்முகத்திறன் கொண்ட மாணவன் செல்போனால் நேர்ந்த விபரீதத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News