சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல்

சவுக்கு சங்கர் வீட்டில் கஞ்சா சிகரெட்டுகள் பறிமுதல் செய்து அவரின் மீது மற்றும் அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்தனர்.

Update: 2024-05-11 03:17 GMT

சவுக்கு சங்கர்

சென்னை மதுரவாயல் பகுதியில் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் குடும்ப அடையாள அட்டை, டேப், மொபைல் போன், இரண்டு லட்சம் பணம், கம்ப்யூட்டர் மானிட்டர், டிவி, நான்கு கஞ்சா அடைத்து வைத்த சிகரெட், வெப் கேமரா, அவர் பயன்படுத்தும் கார், பேங்க் பாஸ்புக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சோதனையில் எடுத்த பொருட்களை சரிவர கணக்கு பார்த்து மதுரவாயல் தாசில்தார் சந்திரசேகர் முன்னிலையில் சவுக்கு சங்கர் வீட்டிற்கு சீல் வைத்து காவல் துறையினர் மூடினர்.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வந்த சவுக்கு மீடியாவில் சோதனை முடித்து காவல் துறையினர் புறப்பட்டனர். 10 பென்டிரைவ்கள், ஹார்டு டிஸ்குகள், ஆவணங்கள், லேப்டாப்கள் பறிமுதல். சோதனைக்கு பிறகு சவுக்கு மீடியா அலுவலகத்தில் நோட்டீஸ் ஒட்டி விட்டு காவல் துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

Similar News