இளைஞர்களின் தியாகத்தை சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார் - மகனை இழந்த தாய் கதறல் !
இளைஞர்களின் உணர்வுகளையும், தியாகத்தையும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார்..
காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் குடும்பத்திற்கு உதவி செய்வது போன்று வெளிநாடுகளில் பணம் வாங்கி உள்ளனர்..
நாம் தமிழர் கட்சியினர் எங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை..
காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இருந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி நாளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என தீக்குளித்து இறந்த விக்னேஷின் அம்மா சென்பக லட்சுமி பேட்டி.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு(16.09.2016) தீக்குளித்து இறந்த விக்னேஷின் அம்மா செண்பக லெட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக உயிரிழந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார்.
விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து பணம் சம்பாதிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டு வைத்தார்.. விக்னேஷ்க்கு நினைவு மண்டபம் கட்ட வெளி நாட்டில் பணம் வாங்கி செலவு செய்தவர் சீமான் என்றார், அதில் ஒரு ரூபாயை கூட அவர் குடும்பத்தினருக்கு தரவில்லை.
எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், தனது ((செண்பக லட்சுமி)) கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்வில்லை, நாங்கள் அவர்களுடன் செல்லவில்லை என் சித்தி தான் என் கண் அறுவை சிகிச்சையை பார்த்ததாக தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள், அவர்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதுற பரப்பி வருகிறார்கள். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.