வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பு ஆய்வு
சென்னை,அசோக் நகர் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-04-13 16:18 GMT
இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதி, அசோக் நகர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட மறுபயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையருமான ராதாகிருஷ்ணன், இன்று (13.04.2024) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.