14 வது நாளாக தொடர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் 14-வது நாளாக தொடர்ச்சியாக பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் பிப்ரவரி 19ஆம் தேதி ஆரம்பித்த போராட்டம் மார்ச் மூன்றாம் தேதியும் தொடர்கிறது. 14- நாட்களாக போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களை இதுவரை ஒரு முறை கூட அரசு அழைத்து பேசவில்லை. கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர் என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பு தொடர்ந்து 14 நாட்களாக இடைநிலை பதிவு மற்றும் ஆசிரியர்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஒன்று கூடுகின்றனர். அவர்களின் ஒற்றை கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் என்பதை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டம் உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.