துறைமுக வளாகத்தில் ஏர் - கன் துப்பாக்கி பறிமுதல்.
துறைமுக வளாகத்தில் ஏர் - கன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 08:43 GMT
பறிமுதல் செய்யப்பட்ட ஏர் கன்
பெரம்பலுார் மாவட்டம், மேல்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி, 36. இவர், சென்னையிலுள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில், லாரி டிரைவராக பணிபுரிகிறார். நேற்று அதிகாலை சரக்கு ஏற்ற, மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்திற்கு லாரியுடன் சென்றார்.
சரக்கு வர தாமதமானதால், லாரியை துறைமுக வளாகத்தில் நிறுத்திவிட்டு, குளிக்க வெளியே செல்லும் போது, காவலர்கள் கிருஷ்ணசாமியை சோதனையிட்டனர். அப்போது, அவரிடம்,'ஏர் - கன்' எனப்படும் சிறிய ரக துப்பாக்கி இருந்தது. இதுகுறித்து காவலர்கள், காட்டூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த போலீசார், துப்பாக்கியை பறிமுதல் செய்து, கிருஷ்ணசாமியிடம் விசாரிக்கின்றனர்.