பத்திரப்பதிவு இணை பதிவாளர் சென்ற காரில் கட்டுக்கட்டாக பணம் - பறிமுதல் செய்து விசாரணை
பத்திரப்பதிவு இணை பதிவாளர் சென்ற வாடகை காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற ரூ.1.25 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
Update: 2023-10-28 01:35 GMT
விருதுநகர் பத்திரப்பதிவு அலுவலக இணை பதிவாளராக மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன் எனபவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று பணி முடித்து விருதுநகர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் உதவியாளர் முத்துக்காசியுடன் வாடகை காரில் மதுரைக்கு சென்றதாக கூறப்படுகிறது இவர்கள் சென்ற காரில் கணக்கில் வராத பணம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அந்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சத்திரரெட்டியாரபட்டி சோதனைச் சாவடியில் அந்த காரை வழிமமறித்து சோதனை செய்தனர் அந்த சோதனையில் அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இரண்டு கட்டுகளாக இருந்த பணம் ரூ.1. 25 லட்சத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் இருவரையும் மாவட்ட பத்திரப் பதிவாளர் அலுவலகத்திற்கு வரவழைத்து பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையில் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர்கள் சால்வன் துரை, பூமிநாதன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி அங்கு வேறு ஏதும் ஆவணங்கள் பணம் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர்.