உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.27 லட்சம் பறிமுதல்
பாரிமுனை பகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.27 லட்சம் பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-06-09 11:52 GMT
பணம் பறிமுதல்
பாரிமுனை பகுதியில் நேற்று இரவு வடக்கு கடற்கரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரித்து சோதனை செய்த போது உரிய ஆவணங்களின்றி ரூ.27 லட்சம் பணம் கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மண்ணடி பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பதும் தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார் வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.