மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தெரிவு செய்யும் பணி
கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.;
Update: 2024-04-18 01:03 GMT
கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவிற்குத் தேவையான கூடுதல் துணை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் பணி (Additional Supplementary Randomization) மாவட்ட தேர்தல் அலுவலரும் கூடுதல் தலைமைச் செயலாளரும் ஆணையாளருமான ராதாகிருஷ்ணன், தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று (17.04.2024) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.