காட்பாடியில் கஞ்சா சாக்லேட் விற்பனை - இருவர் கைது!

வேலூர் காட்பாடியில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2024-03-21 04:53 GMT

இருவர் கைது

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, பான் மசாலா, குட்கா, உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழங்குவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து காட்பாடி டிஎஸ்பி சரவணன் தலைமையிலான காட்பாடி காவல் துறையினர் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் எதிரே உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டதில் ஸ்நாக்ஸ் விற்பனை செய்யும் (மோமோஸ் ஸ்னாக்ஸ்) கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், 13 பாக்கெட்டுகளில் விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 25 ஆயிரம் மதிப்பிலான 520 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குஞ்சன் குமார் கம்டி (21), மனிஷ் குமார் கம்டி (21) ஆகிய இருவரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News