கூட்டணி தொடர்வது காலம் தான் முடிவு செய்யும் - தமிழக காங்கிரஸ் தலைவர்

ஈரோடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பங்கேற்றார்.

Update: 2024-05-16 16:22 GMT

செல்வபெருந்தகை

ஈரோடு மாநகர் , வடக்கு , தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் ஈரோட்டில நடைபெற்றது.இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை , ஈரோடு கிழக்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் EVKS இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த்தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை , கூட்டணியில் இருந்துகொண்டு மீண்டும் காமராஜர் ஆட்சியை கொண்டுவருவோம் என கூறுவது தோழமை கட்சிகளுக்கு சங்கடங்களை ஏற்படுத்தாது என்றும் யார் நல்ல ஆட்சி கொடுத்தாலும் காமராஜர் ஆட்சி தான் என்றார்.

நல்ல ஆட்சி நடக்கிறது பலமுறை சட்டமன்றத்தில் பாராட்டியுள்ளதாகவும் , அதே நேரத்தில் வீட்டு வரி,மோட்டார் வரிகொண்டு வரும் போது அதையெல்லாம் எதிர்த்தோம் என்றார். 2026 தேர்தலில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி தொடர்வது குறித்து காலமும் கட்சி தலைமையும் தான் முடிவு செய்யும் என்ற செல்வப்பெருந்தகை , கலைஞர் பற்றி பாடத்திட்டத்தில் வருவது தவறில்லை என்றும் , காவிரி விவகாரத்தில் தமிழகம்,டெல்டா பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க தமிழக காங்கிரஸ் என்றென்றும் போராடும் , உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற செல்வப்பெருந்தகை தேவைப்பட்டால் கர்நாடகவிற்கு எதிராக தமிழக மக்களை திரட்டி போராடுவோம் என்றார்.

Tags:    

Similar News