தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை பதவியேற்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Update: 2024-02-22 06:44 GMT
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் பதவியேற்று கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி. ஏ.செல்லக்குமார், மாணிக்கம் தாகூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கே.வீ. தங்கபாலு, ஈ.வெ.கி.ச. இளங்கோவன் மற்றும் எம்.எல்.ஏ. சு. திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
Tags:    

Similar News