''நான் நேர்வழியில் இருப்பவன்'' அமைச்சர் ரகுபதிக்கு அறிவுரை வழங்கிய செங்கோட்டையன் !

Update: 2024-05-13 11:49 GMT

 செங்கோட்டையன் 

அதிமுக பிளவுபடும் எனும் அமைச்சர் ரகுபதியின் சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அறிவுரை வழங்கியுள்ளார்.

அமைச்சர் ரகுபதி நேற்றைய தினம், " எடப்பாடி பழனிச்சாமி தலைமை மாறி செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக செயல்படும். தேர்தலுக்குப் பிறகு அதிமுக பிளவுபடும்" என விமர்சனம் செய்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக காஞ்சிபுரத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் சிறப்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், " என்னை பொருத்தவரை மற்றவர்களை கூட அரசியல் வாழ்க்கையில் குறை கூறாமல் என் வாழ்க்கை பயணத்தில் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். கடந்த 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் முழுவதுமாக நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மற்ற கட்சியினருக்கும் தெரியும். நேற்று சட்ட சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்த கருத்து வருத்தம் அளிக்கும் விதமாக உள்ளது. ஒரு கருத்தை தெரிவிக்கும் முன்பு அவர்கள் பொது வாழ்க்கையில் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதுதான் அரசியல்வாதிக்கு உயர்ந்த குணமாக இருக்க முடியும். அதிமுகவிற்கு எப்பொழுது சோதனை வந்தாலும் தொண்டர்களுக்கு என்றைக்குமே நான் தூணாக நின்று செயலாற்ற இருக்கிறேன். இது போன்ற கருத்துக்களை இனிமேல் தெரிவிக்க வேண்டாம்." என பேசியுள்ளார்.

Tags:    

Similar News