இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு!

2014ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் 20000 அபராதம் விதித்து அல்லிகுளம் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

Update: 2024-01-30 09:40 GMT

குற்றவாளி 

சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, குணசுந்தரி என்பவர் தனது தாயார் நாகவள்ளி மற்றும் 7 வயது மகன் மகேஷ்குமார் என்பவருடன் வசித்து வந்தார். குணசுந்தரியின் கணவர் மாரி என்பவர் இறந்ததால் தனது உறவினர் ராஜி (எ) டேஞ்சர் டேவிட் என்பவரை 2வது திருமணம் செய்து ஆந்திரா மாநிலத்தில் வசித்து வந்தார். பின்னர் தனது 2வது கணவர் ராஜி (எ) டேஞ்சர் டேவிட் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15.11.2014ம் ஆண்டு அதிகாலை வீட்டிற்கு வந்த ராஜி (எ) டேஞ்சர் டேவிட் மனைவி குணசுந்தரியுடன் குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை செய்த போது ஏற்பட்ட தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த ராஜி (எ) டேஞ்சர் டேவிட் குணசுந்தரி, அவரது மகன் மகேஷ்குமார் மற்றும் மாமியார் நாகவள்ளி ஆகியோரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பியுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த குணசுந்தரி மற்றும் மகேஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவயிடத்திலேயே இறந்து விட்டனர். காயமடைந்த நாகவள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து குணசுந்தரியின் சகோதரர் நித்தியானந்தம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு தொடர்பாக, அல்லிக்குளம், மகிளா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணை முடிவடைந்து இவ்வழக்கில் நேற்று (29.01.2024) தீர்ப்பு வழங்கப்பட்டது. மேற்படி வழக்கில் எதிரி ராஜி (எ) டேஞ்சர் டேவிட் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால், குற்றவாளி ராஜி (எ) டேஞ்சர் டேவிட்க்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை மற்றும் 20,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
Tags:    

Similar News