செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் மார்ச்.13 வரை நீட்டிப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 25வது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-12 01:44 GMT

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி D.V. ஆனந்த் முன்பாக  ஆஜர்படுத்தப்பட்டார். அவரின் நீதிமன்ற காவலை மார்ச் 13 வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Tags:    

Similar News