செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு; வரும் 28ல் தீர்ப்பு

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வரும் 28ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை கோர்ட் தெரிவித்துள்ளது.;

Update: 2024-03-22 15:05 GMT

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு வரும் 28ஆம் தேதி வழங்கப்படும் என சென்னை முதன்மை கோர்ட் தெரிவித்துள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜியின் வங்கி கணக்கில் 2015, 16 மற்றும் 17 ஆகிய ஆண்டுகளில் அதிகளவில் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை வாதம் செய்தது.

Advertisement

அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி தண்டிக்கப்படும் நிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ள  வழக்கில் அவர்  விடுவிக்கப்பட்டால் என்ன ஆகும்? என செந்தில் பாலாஜி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் வாதம் செய்யப்பட்டது. தொடர்ந்து, வரும் 28 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News