ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை
வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடனான "நெட்வொர்க்" குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2024-03-11 15:17 GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள முன்னாள் திமுக நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜாபர் சாதிக்கின் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் இந்தியா மட்டுமல்லாது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா வரை பரவி உள்ளது.
இந்த போதைப்பொருள் நெட்வொர்க் உருவாகியது எப்படி? என்பது குறித்து ஜாபர் சாதிக்கிடம் மத்திய போதைப்பொருள் அதிகாரிகள் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு குறித்து பல்வேறு கோணங்களில் ஜாபர் சாதிக்கிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்து வருகின்றனர் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.