பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை: உயர்நீதிமன்றம் வேதனை

பணியிடங்களில் நடைபெறும் பாலியல் தொல்லை ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

Update: 2024-06-16 00:41 GMT
பணியிடங்களில் பாலியல் தொல்லையால் சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்ட காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மீதான பாலியல் தொல்லை புகாரை மீண்டும் விசாரிக்க விசாகா குழுவுக்கு உத்தரவு பிறப்பித்தது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு உரிய அவகாசம் வழங்கி 60 நாட்களில் புகார் தொடர்பான விசாரணையை முடித்து அறிக்கை அளிக்க விசாகா குழுவுக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News