நிழல் இல்லா நாள் செயல்முறை விளக்கம்

அரக்கோணத்தில் நிழல் இல்லா நாள் செயல்முறை விளக்கம் அரக்கோணம் அறிவியல் இயக்கம் சார்பில் நடந்தது.

Update: 2024-04-25 17:25 GMT

நிழல் இல்லா நாள் விளக்கம்

ஒவ்வொரு ஆண்டும் 2 நாட்கள் மட்டுமே சூரியன் சரியாக கிழக்கே உதித்து மேற்கே மறையும். மற்ற நாட்களில் தென்கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் உதித்து மறையும். சூரியன் சரியாக கிழக்கே உதித்து மேற்கே மறையும் நாட்களில் சூரியன் நமது தலைக்கு மேலே வந்து நிழல் இல்லாத நிலையை உருவாக்கும். இந்த நிழல் இல்லா நாள் கடைபிடிக்கப்பட்டது. இதனை அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா ஐ.டி.ஐ. மாணவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் அரக்கோணம் அறிவியல் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது.

காலை 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடந்த நிகழ்ச்சியின் போது ஐ.டி.ஐ. வளாகத்தில் மாணவர்கள் கைகளை கோர்த்து நின்று மனித வளையத்தை ஏற்படுத்தி நிழல் இல்லா நிலையை உருவாக்கினர். நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. முதல்வர் சீனிவாசன், பயிற்சி அலுவலர்கள் கிருஷ்ண திலக், ஜி.மணி, பேராசிரியர் வீரமணி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் கலைநேசன் மற்றும் கோட்ட ஒருங்கிணைப்பளார் பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News