சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா
சக்தி மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-05 08:44 GMT
விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள்
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விளையாட்டு விழா நடந்தது.விழாவிற்கு, பள்ளி சேர்மன் ரவிக்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர் நிறுவனர் பார்வதி பேசினார்.
மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளும் மிக முக்கியம். நன்றாக விளையாடுவதன் மூலம் உடல் வலிமை பெறுவதுடன், மனஉளைச்சல் ஏற்படாது என அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர்களின் அணிவகுப்பு, ஆடல்,பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.