ஜூனியர் மாணவனை மொட்டையடித்து ராகிங் -சீனியர் மாணவர்கள் 7பேர் கைது.

Update: 2023-11-08 08:01 GMT

பீளமேடு காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை அவிநாசி சாலையில் தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.கல்லூரி வளாகத்தில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.இங்கு திருப்பூர் மாவட்டதை சேர்ந்த மாணவர் ஒருவர் முதலாம் ஆண்டு பயின்று வரும் நிலையில் அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவர்கள் மது அருந்த பணம் கேட்டுள்ளனர்.முதலாம் ஆண்டு மாணவர் பணம் இல்லை என கூறிய நிலையில் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேர் முதலாம் ஆண்டு மாணவரை தாக்கியதுடன் அவருக்கு மொட்டை அடித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்..இதுகுறித்து முதலாம் ஆண்டு மாணவர் தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கல்லூரிக்கு விரைந்தனர்.அங்கு தனது மகனின் நிலை கண்டவர்கள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சீனியர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராகிங் செய்து மாணவரை மிரட்டியது உறுதியானது.இதனை தொடர்ந்து அவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.மாணவனை தாக்கி மொட்டையடித்தும் தாக்குதல் நடத்தி ராகிங் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News