வீரகனூர் அருகே குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது

வீரகனூர் அருகே குட்கா விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2023-12-07 11:16 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே வேப்பம் பூண்டி பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக, வீரகனூர் போலீசருக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, வீரகனூர் எஸ்ஐ அந்தோணி மைக்கேல், சிவகுருநாதன் தலைமையில் போலீசார், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேப்பம்பூண்டிமேடு பகுதியில், தண்டபாணி கோயில் அருகில் உள்ள கடையில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த கடை உரிமையாளர் அன்பு மகன் மிதின்குமார் (32) என்பவரை போலீசார் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News