மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவிலுள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட வெடிப்பு  காரணமாக 600மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது.

Update: 2024-05-19 01:52 GMT

மேட்டூர் அனல் மின் நிலையம் 

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்படுகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் செயல்பட்டு வருகின்றன.  இதன் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகுசெயல்பட்டு வருகிறது. இதன் மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டு பிரிவுகளிலும் 1440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் உள்ள கொதிகலன் குழாயில் வெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட பகுதி மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்களில் இப்பணி நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News