அயோத்தி ராமருக்கு வெள்ளி வில், அம்பு; ஆந்திர மாநில பக்தர்கள் காணிக்கை
அயோத்தி ராமர் கோவிலுக்கு காணிக்கை வழங்க, வெள்ளியாலான வில், அம்பை, ஆந்திர மாநில பக்தர்கள் காஞ்சி சங்கரமடத்தில் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
Update: 2024-05-23 03:45 GMT
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்த, ஆந்திர மாநில பக்தர்கள், 13 கிலோ எடையுள்ள வெள்ளியில், வில் மற்றும் அம்பு செய்துள்ளனர். காணிக்கை செலுத்த உள்ள வெள்ளி வில்லும், அம்பும் நேற்று காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு கொண்டு வந்து, காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் வழங்கினர்.
தொடர்ந்து, சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், வெள்ளி வில் மற்றும் அம்பு ஆகியவற்றை, மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்து, ஆந்திர மாநில பக்தர்களிடம் வழங்கினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதையடுத்து, வெள்ளி வில்லும், அம்பும் அயோத்தி கோவிலுக்கு ஆந்திர மாநில பக்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.