சிரக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

பனப்பாக்கம் பகுதியில் சிரக்காத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-03-21 06:08 GMT

கும்பாபிஷேக விழா

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த பொய்கைநல்லூர் கிராமத்தில் தேவாரம்பாடிய திருநாவுக்கரசரால் போற்றப்பட்ட சிரக்காத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலில் உலக மக்களின் நன்மை வேண்டியும், மழை வேண்டியும், சாஸ்திர முறைப்படி, தமிழில் வேதமந்திரங்கள் ஓதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக திங்கட்கிழமை கணபதி பூஜை, தன பூஜை, கோ பூஜை, நவகிரக ஹோமம், முதற்கால யாக வேள்வி, கும்ப அலங்காரம் ஆகியவையும், செவ்வாய்க்கிழமை விஷேச சாந்தி, இரண்டாம் கால யாக வேள்வி, நாடி சந்தானம் ஆகியவையும் நடைபெற்றது. தொடர்ந்து, புனித நீர் கலசங்களை எடுத்து சென்று கோபுர கலசத்தின் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் நெமிலி, பனப்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், ஓச்சேரி, ரெட்டிவலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News