சிவகாசியில் பயங்கரம் - 10 பேரை பலி வாங்கிய பட்டாசு ஆலை வெடி விபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-10 01:53 GMT
விபத்து நடந்த பட்டாசு ஆலை 

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.10 தொழிலாளர்கள் பரிதாபமாக பலி..

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சேர்ந்த சரவணன் சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டி கிராமத்தில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கி வரும்,இந்த பட்டாசு ஆலையை முத்துகிருஷ்ணன் என்பவர் ஒப்பந்த முறையில் நடத்தி வருகிறார்.மேலும் இந்த பட்டாசு ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு தயாரிக்கும் பணியில் 50 மேற்பட்ட ஆண்,பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரும் போது,பட்டாசு ஆலையின் ஒரு அறையில் பேன்சிரக வெடிகள் தயாரித்ததாக கூறப்படுகிறது.

Advertisement

அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடித்து சிதறிய பேன்சி ரக பட்டாசுகள் அடுத்தடுத்து அறைகளுக்கு பரவியது.இதில் 8 அறைகள் முற்றிலுமாக தரைமட்டமாயின. மேலும் அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டன.இதில் பலத்த காயமடைந்தனர் சிலர் உடல்கருகிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வெளியில் தூக்கி வீசப்பட்டு கிடந்தனர்.இந்த பயங்கர வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.இந்த பயங்கர வெடிவிபத்தில் 5பெண் தொழிலாளர்கள் உள்பட 10 உடல்கள் கருகி இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

Tags:    

Similar News