பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை வழங்கணும்!

பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை வழங்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2023-12-11 09:13 GMT

பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை வழங்க பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் வாழமரக்கோட்டை வி.எஸ்.இளங்கோவன், தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: சர்வதேச சிறுதானிய ஆண்டு டிச.31-ம் தேதியுடன் முடிவடைகிறது. 25 லட்சம் டன் சிறுதானியங்களை கொள்முதல் செய்ய மத்திய விவசாய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தற்போது தஞ்சாவூர் மாவட்ட மானாவாரி பகுதிகளில் சிறுதானியங்களை விதைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எனவே, கம்பு, சோளம், வரகு, நிலக்கடலை, எள், கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய விதைகளை, பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பெற்று வேளாண் துறை மூலம் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும்.

வேளாண் துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சிறுதானியங்களை கொள்முதல் செய்யவும், பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுதானியங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான பயிர்க் கடன்களை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உடனே வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரின்றி சம்பா, தாளடி நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதால், பயிர்க் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News