புகையிலைப் பொருள் கடத்தல்; வடமாநில வாலிபர் கைது

கோவில்பட்டியில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2024-03-23 01:25 GMT

கோவில்பட்டியில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.


கோவில்பட்டியில், புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசார் இளையரசனேந்தல் சாலையில் நேற்று ரோந்து சென்றனா். அப்போது, ஓா் இளைஞா் வைத்திருந்த பொட்டலத்தை சந்தேகத்தின்பேரில் பிரித்துப் பாா்த்தபோது, அதில் புகையிலைப் பொருள்கள் இருந்தனவாம். 

விசாரணையில் அவா், ராஜஸ்தானை சோ்ந்த கணேஷ்ராம் மகன் ஹரிராம் (26) என்பதும், அவருக்கு இந்தப் பொருள்கள் பாா்சல் சா்வீஸில் வந்ததாகவும் தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். 

மற்றொரு சம்பவம்  மேற்கு காவல் நிலைய போலீசார் இளையரசனேந்தல் சாலையில் உள்ள பாா்சல் சா்வீஸ் அருகே ரோந்து சென்றபோது, நடந்து வந்த இளைஞா் போலீஸாரை பாா்த்ததும், தான் வைத்திருந்த பொட்டலத்தை வீசிவிட்டு தப்பியோடினாராம். அதில், 25 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதை போலீசார் கைப்பற்றினா்; மேலும், வழக்குப் பதிந்து, அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.

Tags:    

Similar News